ஜப்பானிலிருந்து பறந்து வந்த., வந்தியத்தேவன் ரசிகர்கள்.! வைரலாகும் புகைபடங்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் திரையுலகில் பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாடம் திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தில் விக்ரம் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியீட்டு தேதி அறிவிக்கபட்ட நாளிலிருந்தே  திரைபடத்திற்கு ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகியது. 

இதனை ஒரு வாரத்திற்கு முன்பாகவே ரசிகர்கள் முன்பதிவு செய்து சென்று பார்த்து வருகின்றனர். இந்த படத்தை பார்த்த பலரும் அப்படத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திற்கும் ரசிகர்களாகி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தியை காண வந்த ஜப்பான் ரசிகர்கள் சிலரை கார்த்தி சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கலக்கி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japanese fans meet actor Karthik


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->