ஜவான் ரிலீஸ் - திருப்பதியில் தரிசனம் செய்யும் படக்குழுவினர்.!
javan movie gang swami dharisanam in tirupati temple
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ஜவான். இந்தப் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ஜவான் படக்குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
அதாவது, நடிகர் ஷாருக்கான், அவரது மகள், நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் இன்று காலை சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் அங்குள்ள தங்க கொடிமரத்தை வழிப்பட்டனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு திரண்டுள்ளனர். இதனால், ஷாருக்கான் வேகமாக காரில் ஏறிச் சென்றுள்ளார். இதே போல் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் அவசர அவசரமாக கோவிலில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
English Summary
javan movie gang swami dharisanam in tirupati temple