இன்று பிக்பாஸ் வீட்டில் ஜெயம் ரவி: வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைரன்'. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். 

மேலும் இதில் யோகி பாபு, சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2 தோற்றங்களில் ஜெயம் ரவி நடித்துள்ள இந்த திரைப்படம் குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் எஸ்.கே ஒழிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 'சைரன்' திரைப்படத்தின் டீசர் இன்று பிக் பாஸ் வீட்டில் வெளியாக உள்ளது. 

இதனை பட குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டீசரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayam Ravi Siren movie Update Released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->