#LEO || தியேட்டர் சூறையாட இவர்கள் தான் காரணம்! காவல்துறையினர் மீது பாய்ந்த நீதிபதி! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் லியோ டிரெய்லர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. லியோ ட்ரெய்லர் வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நேற்று லீயோ படத்தின் டிரெய்லர் ஒளிபரப்பப்பட்டது. இதற்காக தியேட்டருக்குள் குவிந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு தியேட்டர் இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் கோஷங்களை எழுப்பினர்.

விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் வன்முறை களியாட்டத்தில் ஈடுபட்டதில் ரோகினி தியேட்டர் முழுவதும் சேதமடைந்தது. இது தொடர்பாக விடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

இதற்கிடையே லியோ பட இசை வெளியீட்டு விழா தொடர்பான வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் லியோ திரைப்பட டிரெய்லர் வெளியிட்டபோது ரோகினி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்டதற்கு காவல்துறையினரின் தவறான கையாளுதலே காரணம் என குற்றம் சுற்றியுள்ளார்.

மேலும் விஜய் ரசிகர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி அவர்களை முறையாக கையாண்டிருக்க வேண்டும் என நீதிபதி ஜெயசந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அப்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்தானதற்கு காவல்துறை காரணமல்ல. இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தற்போது அனுமதி கோரினால், பரிசீலிக்கத் தயார் என தலைமை குற்றவியல் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தயாரிப்பு நிறுவனமே ரத்து செய்து விட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Judge opined police responsible for Rohini theater riots


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->