ஹோலி பண்டிகை! வண்ணப்பொடி பிடிக்கவில்லை என்றால் தார்ப்பாய் அணிந்து கொள்ளவும்!!! - பாஜக பிரமுகர் - Seithipunal
Seithipunal


ஹோலி பண்டிகை 14-ந் தேதி வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகை, ரம்ஜான் மாதத்தின் 2 வது வெள்ளிக்கிழமையன்று வருகிறது.இதனால், பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக லக்னோவில் உள்ள ஈத்கா மசூதியின் இமாம் என்பவர் உத்தரபிரதேசத்தில் உள்ள மசூதிகள் தொழுகை நேரத்தை 1 மணி நேரம் தாமதமாக, அதாவது பகல் 2 மணிக்கு நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதில் தொலைதூரத்துக்கு செல்லாமல், அருகில் உள்ள மசூதியிலேயே தொழுகை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் சம்பல் நகரில், இந்துக்கள் பகல் 2.30 மணிவரை ஹோலி கொண்டாடுவது என்றும், அதன்பிறகு முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஹோலி பண்டிகை தொடர்பாக பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் தெரிவித்த யோசனை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உத்தரபிரதேச தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக உயர் அதிகார ஆலோசனை குழு தலைவர் ரகுராஜ் சிங்.
அவர் கூறியதாவது,"ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் தொழுகை காரணமாக, மாநில அரசு உஷார் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் சிலர் ஆட்சேபனை எழுப்பி வருகிறார்கள். ஹோலி பண்டிகை சத்ய யுகத்தில் இருந்தே கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறைதான் வருகிறது.

சனாதன தர்ம நம்பிக்கை சார்ந்த விஷயம். வண்ணப்பொடி தூவுபவர்களை குறிப்பிட்ட முறையில் வீசுமாறு கூற முடியாது.அன்றைய தினம், மசூதிகளை தார்ப்பாய் கொண்டு மூடுவதுபோல், முஸ்லிம் பெண்கள் 'ஹிஜாப்' அணிவதுபோல், முஸ்லிம் ஆண்கள் தார்ப்பாயால் செய்யப்பட்ட 'ஹிஜாப்' அணியலாம்.அப்படி அணிந்துகொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லலாம். அவர்களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாது.

எளிதாக தொழுகை நடத்தலாம். இந்துக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தக்கூடாது" எனத் தெரிவித்தார்.ரகுராஜ் சிங்கின் கருத்து  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Holi festival If you dont like colored powder please wear a tarpaulin BJP leader


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->