கண்டன பொதுக்கூட்டம்!!! இன்று திமுக சார்பில் தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து.....
Public meeting to condemn constituency realignment and imposition of Hindi today on behalf of DMK
மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்துக் கூறும் விதமாக, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பைக் கண்டித்து "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் மார்ச் 12-ந்தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதற்காகத் தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில், தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.
மேலும் திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Public meeting to condemn constituency realignment and imposition of Hindi today on behalf of DMK