பிரபல இயக்குனர் கைதுக்கு உச்சநீதிமன்றம் தடை.. காளி பட சர்ச்சை போஸ்டர் வழக்கு.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஆன லீனா மணிமேகலை தயாரித்து வருகின்ற காளி எனும் குறும்படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டு இருந்தார். அந்த போஸ்டரில் காளி புகை பிடிப்பது போன்ற ஒரு சர்ச்சையான காட்சி இடம் பெற்று இருந்தது. 

இதை கண்ட பலரும் இந்து மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லீனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, லீனா மணிமேகலை இவ்வழக்குகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்த வழக்குகளால் தான் கைது செய்யப்பட கூடும் எனவும், தனக்கு லுக்கோ நோட்டீஸ் விடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து தனது கைதுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
 
இது தலைமை நீதிபதிக்கு முன் விசாரணைக்கு வந்த நிலையில் அவரது மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மத்திய பிரதேசம், டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இவ்வழக்கு குறித்து லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaali Poster Viral issue Director request


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->