திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி ஜி. சேகரன் காலமானார்!
Kalaipuli G Sekaran Death
திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைப்புலி ஜி. சேகரன் (73 வயது) இன்று (ஏப்ரல் 13) உடல்நலக் குறைவால் காலமானார்.
பன்முக திறமை கொண்டவராக விளங்கிய ஜி. சேகரன், தயாரிப்பு மட்டுமல்லாமல் விநியோகம், இயக்கம், நடிப்பு ஆகிய துறைகளிலும் முக்கிய பங்களிப்பு செய்தவர். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள அவர், ஊரைத் தெரிஞ்சிகிட்டேன், காவல் பூனைகள், உளவாளி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
சிறிய பட்ஜெட் படங்களுக்கு அங்கீகாரம் மற்றும் ஆதரவு அளித்ததுடன், புதிய முயற்சிகளை ஊக்குவிக்கக் களமிறங்கியவர். அவரது இறப்பு திரைத்துறைக்கு ஒரு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
தமிழ் சினிமா சமூகத்தில் இருந்து பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
English Summary
Kalaipuli G Sekaran Death