"ராயன்" பட வெற்றிற்கு கலாநிதி மாறன் தனுஷிற்கு கொடுத்த அன்பளிப்பு! - Seithipunal
Seithipunal


சில வாரங்களுக்கு முன் தனுஷ் இயக்கி நடித்து வெளியான படம் ராயன். தனுஷின் 50வது படம் என்பதால் நல்ல வரவேற்பை பெற்று இந்த படம் 116 கோடி ரூபாயை ஒரு வாரத்திலேயே வசூலித்துள்ளது.

இப்படத்தில், நடிகரும் இயக்குனருமான தனுஷுடன் நடிகை துஷாரா விஜயன், நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தனுஷ் நடித்த படங்களிலேயே "ராயன்" அதிக வசூல் செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் "ராயன்" முதல் இடத்தில் உள்ளது. உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

ஓடிடி தளமான அமேசான் பிரைமில் "ராயன்" படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் தனுஷை அழைத்து "ராயன்" பட வெற்றியை கொண்டடும் விதமாக இரண்டு காசோலையை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalanithi Maran gift to Dhanush for Rayan film win


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->