''கல்கி 2898 ஏ.டி'' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்.!
Kalki 2898 AD Movie Release Update
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''கல்கி 2898 ஏ டி''. இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதாணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அதிக பொருட்செலவில் அறிவியல் கதையை மையமாக கொண்டு உருவாகும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் 'கல்கி 2898 ஏ டி' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனை பட குழு போஸ்டர் ஒன்று வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
English Summary
Kalki 2898 AD Movie Release Update