ரஜினிகாந்த் - லோகேஷ் படத்தில் இணையும் KGF நடிகர்..  உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. 

மேலும், இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள 170 திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய  த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தத் திரைப்படம் இந்திய அளவில் பான் இந்திய திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதற்கேற்றார் போல நடிகர்களையும் தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷ் இயக்கம் ரஜினிகாந்த் திரைப்படத்தில் கேஜிஎஃப் நடிகர் யஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanada actor yash in Lokesh - Rajinikanth movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->