கோர விபத்து.. சம்பவ இடத்திலேயே நடிகை குழந்தை மரணம்.. உயிருக்குப் போராடும் சீரியல் நடிகை.! - Seithipunal
Seithipunal


கன்னட தொலைக்காட்சியில் 25 க்கும் மேலான சீரியல்களில் நடிகை அம்ருதா நடித்துள்ளார். இவருக்கு 6 வயதில் சாம்னவி என்று மகள் இருக்கின்றார். ஜனவரி 13ஆம் தேதி மாலை 04.30 மணி அளவில் தாய் மகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்பொழுது இவர்கள் இருவரும் வந்த வாகனத்தை எதிரே வந்த லாரி மோதி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரில் குழந்தை சாம்னவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

மேலும் இந்த விபத்தில் பலத்த காயமுற்ற நடிகை அம்ருதாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய லாரி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் குமாரசாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிகழ்ச்சி கன்னட சீரியல் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kannada serial actress accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->