பிரபல பாலிவுட் நடிகையை அவமதித்த காந்தாரா படக்குழு.?!
Kanthara 2 rumour make controversy
கன்னட மொழியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாகிய திரைப்படம் தான் காந்தாரா. இது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் தேசிய அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சிறிய அளவிலான பட்ஜெட்டில் உருவாகிய இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க படக்குழு முடிவு எடுத்த நிலையில் இதன் கதை தயார் செய்யப்பட்டு தற்போது படத்தின் வேலைகள் துவங்கியுள்ளன.
ஆனால் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தான் நடக்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது. இந்த காந்தாரா 2 படத்தில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான ஊர்வசி ரவுடெல்லா எல்லா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் செட்டியுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி அதில் காந்தாரா 2 என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் காந்தாரா படத்தில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பட குழு தரப்பில் இருந்து இது உண்மைக்கு புறம்பான தகவல் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நடிகை எதற்காக அப்படி பதிவு செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால், பட குழு மறுப்பு தெரிவித்துள்ள இந்த விஷயம் ஊர்வசியை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Kanthara 2 rumour make controversy