காந்தாரா பட நடிகரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.!   - Seithipunal
Seithipunal


நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்த திரைப்படம் 'காந்தாரா'. இந்தப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வெளியானது. கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த படம், கர்நாடகா மாநிலத்தில் விமர்சன ரீதியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அத்துடன் நல்ல வசூலையும் பெற்றது. 

கன்னடத்தைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டு, ரூ.500 கோடிக்கும் கூடுதலாக வசூல் செய்துள்ளது.

இதில், வன துறை அதிகாரி முரளிதர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் குமார் என்பவர் நடித்துள்ளார். ஷீ மற்றும் தி பேமிலி மேன் உள்ளிட்ட வலைத்தொடரிலும் நடித்த அனுபவம் கொண்ட இவர், தனது டுவிட்டரில் அவ்வப்போது வெளிப்படை தன்மையுடன் பதிவுகளை பகிர்ந்து வந்துள்ளார். 

இந்நிலையில், அவருடைய டுவிட்டர் கணக்கு தற்காலிக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது டுவிட்டர் கணக்கை பயனாளர்கள் தேடினால், டுவிட்டரின் விதிகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று காட்டுகிறது. 

இந்த கணக்கு எப்போதில் இருந்து முடக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரவில்லை. ட்விட்டரை தவிர, இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலிலும் அவர் தனது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanthara movie actor twitter account close


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->