காந்தாரா படம் எதிரொலி | கர்நாடக மாநில அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!
Kanthara movie effect
கன்னட மொழி திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். காந்தாரா படத்தில் தெய்வ நர்த்தகர்களின் துயரம் குறித்து விரிவாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர்-டூப்பர் ஹிட் திரைப்படமாக "காந்தாரா" திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படக்குழு வெளியிட்டது. அனைத்து மொழிகளிலும் நல்ல வசூலை வாரிக் குவித்து வருகிறது காந்தாரா .
ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் ரூ. 170 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட மொழி திரைப்படமான கேஜிஎஃப்க்கு பிறகு மாபெரும் வெற்றியை இந்த காந்தாரா திரைப்படம் வசூல் வேட்டை செய்து வருகிறது.
இந்நிலையில், காந்தாரா திரைப்படத்தின் எதிரொலியாக கர்நாடக மாநில அரசு, 60 வயதுக்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.