சினிமா டிக்கெட்டுகளுக்கு செஸ் வரி உயர்வு - கர்நாடக அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக அரசு சினிமா டிக்கெட்டுகள், சினிமா தொடர்பான ஓடிடி சந்தா கட்டணம், கலாச்சார கலைஞர்கள் வருமானத்தின் மீது இரண்டு சதவீதம் செஸ் வரி விதிக்க பரிசீலனை செய்து வருகிறது.

இந்த செஸ் வரி மாநில அரசால் மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒன்றில் இருந்து இரண்டு சதவீதம் வரை திருத்தம் செய்யப்படும். இந்த செஸ் வரி சினிமா டிக்கெட்டுகள், ஓடிடி சந்தாக்கள், கர்நாடகாவில் உள்ள நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவற்றிற்கு பொருந்தும். 

இந்த நிலையில், கர்நாடக சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் மசோதா வெள்ளிக்கிழமையான நேற்று சட்டசபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நல வாரியத்தை அமைப்பது மற்றும் நிதியளிப்புத் திட்டங்களுக்கான நிதியை நிறுவுவதை வலியுறுத்துகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்த மசோதா திரைப்படத் துறையில் ஒரு கலைஞராக அல்லது மேற்பார்வை, தொழில்நுட்பம், கலை ஆகியவற்றில் பணிபுரியும் எந்தவொரு நபரும் ஒரு சினிமா மற்றும் கலாச்சார ஆர்வலராகக் கருதப்படுவார் என்று தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnataga govt discuss 2 percent cess tax to movie tickets


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->