புதிய சாதனை படைத்த பஜாஜ் பல்சர்! 2 கோடி பைக்குகள் விற்பனை! மாஸ் காட்டும் பஜாஜ் பல்சர்!
Bajaj Pulsar sets new record 2 crore bikes sold Bajaj Pulsar shows mass
பஜாஜ் ஆட்டோ லிமிடெடின் பிரபல மோட்டார் சைக்கிள் பிராண்டான பல்சர் (Pulsar), உலகம் முழுவதும் 2 கோடி விற்பனையை தாண்டியுள்ளது. 2001 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த மாடல், தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகி வருகிறது. இந்த சாதனையை கொண்டாடும் வகையில், பஜாஜ் நிறுவனம் ஏப்ரல் மாதத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் சிறப்பு தள்ளுபடி விலைகள் அறிவித்துள்ளது.
விற்பனை கணக்கு:
பல்வேறு மாடல்களுக்கு சிறப்பு விலைகள்:
(டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை )
-
பல்சர் 125 நியான் – ₹84,493 (₹1,184 சேமிப்பு)
-
பல்சர் 125 கார்பன் ஃபைபர் – ₹91,610 (₹2,000 சேமிப்பு)
-
பல்சர் 150 சிங்கிள் டிஸ்க் – ₹1,12,838 (₹3,000 சேமிப்பு)
-
பல்சர் 150 ட்வின் டிஸ்க் – ₹1,19,923 (₹3,000 சேமிப்பு)
-
பல்சர் N160 USD – ₹1,36,992 (₹5,811 சேமிப்பு)
-
பல்சர் 220F – ₹7,379 வரை சேமிப்பு
மேலும், NS125 Base, NS125 ABS மற்றும் N160 TD சிங்கிள் சீட் மாடல்களிலும் கூடுதல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
சிறப்பு utt
பஜாஜ் ஆட்டோ மோட்டார் சைக்கிள் பிரிவின் தலைவர் சாரங் கனாடே கூறுகையில்,"2 கோடி விற்பனை என்பது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கும், எங்கள் தரத்திற்கும் ஒரு பெரிய அங்கீகாரம். இதைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் மாதத்தில் பல்சர் மாடல்களுக்கு சிறப்பு விலைகளை வழங்குகிறோம்," என்றார்.
பல்சர் பல்வேறு வகைகள்:
பல்சர் சீரிஸ் தற்போது 125cc முதல் 400cc வரை Classic, NS மற்றும் N என மூன்று தளங்களில் கிடைக்கின்றது. இது பரந்த அளவிலான ரைடர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கம் தொடரும்:
தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு போன்ற முக்கிய சந்தைகளில் பல்சர் முதலிடத்தில் இருப்பதோடு, பஜாஜ் தனது உலகளாவிய பைக்கிங் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
English Summary
Bajaj Pulsar sets new record 2 crore bikes sold Bajaj Pulsar shows mass