திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் புதிய தேர் செய்வதற்கான பணி..எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்!
Work on making a new car in Thirukameeswarar temple Leader of the Opposition R. Shiva started
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலயத்தில் புதிய தேர் செய்வதற்கான செட் அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்.
வில்லியனூரில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் ஆலயத்திற்கு புதிய திருத்தேர் செய்வதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் இந்து அறநிலையத்துறை முடிவு செய்து அதற்காக கோவில் வளாகத்தில் செட் அமைக்கும் பணிக்கான பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, திருத்தேர் செய்வதற்கான ஷெட் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கோவில் சிறப்பு அதிகாரி திருக்காமேஸ்வரன், நிர்வாகிகள் லட்சுமணன் என்கிற மண்ணாங்கட்டி, ரமணன், ஞானவேல், மதி என்கிற சுப்புராஜ், லட்சுமணன், ஜனார்த்தனன், சத்தியமூர்த்தி, பச்சைமுத்து, குணா, பழநியாண்டி, ராமதாஸ், குரு, ராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, தர்மராஜ், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், தொமுச தலைவர் அங்காளன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் சரவணன், துணைச் செயலாளர்கள் ஜெகன்மோகன், அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், ஏழுமலை, சபரிநாதன், மிலிட்டரி முருகன், சரவணன், வாசு, சுரேஷ், கார்த்திகேயன், பாலமுருகன், முத்துப்பாண்டி, பிரவீன், ராமஜெயம், ரகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
English Summary
Work on making a new car in Thirukameeswarar temple Leader of the Opposition R. Shiva started