டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளை..மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்!
Robbery at TASMAC shop Police are on the lookout for the suspects
புளியங்குடி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ஊருக்கு வெளியே வயல்வெளி பகுதியில் அமைந்துள்ளது அரசு டாஸ்மாக் கடை உள்ளது.இந்த கடை பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு சாத்தப்படுவது வழக்கம்.இந்தநிலையில் நேற்று முன்தினம் சம்பவத்தன்று வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். இதையடுத்து நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த விலை உயர்ந்த ரக மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். பண இல்லாதால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் மதுபாட்டில்களை மட்டுமே எடுத்து சென்றனர்.மேலும், கொள்ளையர்கள் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்தநிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது டாஸ்மாக் கடையில் கதவு திறந்து கிடந்ததை பார்த்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் வந்து கடைக்குள் சென்று பார்த்தபோது மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த துணிகர கொள்ளை குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
English Summary
Robbery at TASMAC shop Police are on the lookout for the suspects