கார்த்தியின் விருமன் பட ஆடியோ லாஞ்சில் அதிதி சங்கர்- கார்த்தியின் புகைப்படங்கள் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்க, இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம் தான் விருமன். இந்தப்படத்தில் கருணாஸ், சூரி, ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நிறைய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் கடந்த 2021 செப்டம்பரில் பூஜையுடன் துவங்கிய நிலையில், மதுரை மற்றும் தேனி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

சமீபத்தில் இந்த படத்தின் கஞ்சா பூவு கண்ணால பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதியே ரிலீசாகும் என்று படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அதிதி சங்கர் மற்றும் கார்த்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karthis Viruman audio launch photos viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->