கருடன் படம் ஓடிடி வெளியீடு - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


எதிர் நீச்சல்', 'காக்கிச் சட்டை', 'கொடி', 'பட்டாசு' உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான படம் 'கருடன்'. கதாநாயகனாக சூரி நடித்துள்ள இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம் கடந்த மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இந்தப் படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது வரை இந்தத் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், திரையரங்குகளில் உள்ள கருடன் திரைப்படம் , விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 

மேலும் இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karudan movie ott release update


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->