சைலண்டாக லோகேஷ் செய்த செயல்.. கச்சிதமாய் கணித்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகியது. இதில் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பார். 

 இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நேரடியாக தெலுங்கில் நடிக்க உள்ளார். தளபதி 66 என்று கூறப்படும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இதற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். தொடர்ந்து விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. மேலும், இதில் திரிஷா வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக இயக்குனர் லோகேஷ் சமீபத்தில் இவர்கள் இருவரையும் சமூக வலைதள பக்கத்தில் பின் தொடர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Keerthi suresh and thrisha in thalapathy67 movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->