பாலிவுட் பட வாய்ப்பிற்காக தரம் தாழ்ந்து போகும்.. கீர்த்தி சுரேஷ்.! கடுப்பாகும் தமிழ் ரசிகர்கள்.!
keerthi suresh glamour for bollywood
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் மற்றும் ரெமோ போன்ற படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
இவர் மகாநடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று தேசிய விருதுகளை வென்றார். அந்த படத்தில் நடிகை திலகம் சாவித்திரியாகவே அவர் வாழ்ந்து காட்டி பலரது மனதையும் கொள்ளை அடித்தார்.
இறுதியாக இவரது நடிப்பில் சாணிகாகிதம் மற்றும் சர்க்கரு வாரி பட்டா போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக பாலிவுட் படங்களில் களமிறங்க வேண்டும் என்று தனது உடல் எடையை குறைத்து சமீபகாலமாக கதையம்சம் பொருந்திய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
பாலிவுட் சினிமா என்றாலே, அதில் கவர்ச்சி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கும். எனவே, நடிகை கீர்த்தி சுரேஷும் இப்போது கவர்ச்சிக்கு தயார் என்கிற ரீதியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளித்து வருகின்றார்.
English Summary
keerthi suresh glamour for bollywood