பிரபல நகைச்சுவை நடிகை மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்! - Seithipunal
Seithipunal


மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 41.

கனக சிம்ஹாசனம், ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், எல்சம்மா என்ன ஆங்குட்டி உள்ளிட்ட மலையாள படங்களில் நடிகை சுபி சுரேஷ்  நடித்துள்ளார்.

மிமிக்ரி கலைஞராக திரை பயணத்தை தொடங்கிய சுபி சுரேஷ், மலையாள திரையுலகில் தவிர்க்க முடியதாக ஒரு நகைச்சுவை நடிகையாக மாறினார்.

மேலும் கேரளாவில் பெண்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம், புகழின் உச்சிக்கே சென்றார் நடிகை சுபி.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சுபியின் உடல்நிலை மோசமானதாகவும், அதனால் அவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அவரின் மரணத்திற்கான அதிகாரபூர்வக காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Malayalam Comedy Actress Subi Suresh Death 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->