ராக்கி பாயின் கே.ஜி.எப்-3.. தயாரிப்பாளர் விஜய் கிரங்கடூர் கொடுத்த அப்டேட்..!! - Seithipunal
Seithipunal


கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப்-1, கேஜிஎஃப்-2 ஆகிய இரு படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. வசூல் ரீதியில் சாதனை படைத்த இந்த இரு படங்களைத் தொடர்ந்து கேஜிஎஃப்-3 திரைப்படம் பற்றி ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரங்கடூர் கேஜிஎஃப்-3 படத்திற்கான அப்டேடை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கேஜிஎப் 3 படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் நீல் முன்பே தயார் செய்து விட்டார். கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்தில் யாசின் இளமைக்காலம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் இடம் பெறும். கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்பொழுது தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் சாலர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் கேஜிஎப்-3 படத்திற்கான பணிகளை தொடங்க உள்ளார்" என அறிவித்துள்ளார். கே.ஜி.எஃப் தயாரிப்பாளர் விஜய் கிரங்கடூர் இந்த அப்டேட் ரசிகர் மத்தியில் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KGF3 movie Update given by producer Vijay Krangadoor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->