பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபல கவர்ச்சி நடிகை.?!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். 100 நாட்கள் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியை காண நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

அடுத்ததாக என்னவெல்லாம் நடக்கும் வீட்டிற்குள் யார் யார், எப்படி எப்படியெல்லாம் சண்டை போடுவார்கள் என்று மக்கள் இரவு 9:00 மணி ஆனால் போதும் தொலைக்காட்சி முன் அமர்ந்து விடுகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக 5 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது 6-வது சீசன் துவங்கவுள்ளது.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் இதன் பிரமோ வெளியாகியது. அதன்படி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதத்தில், துவங்க இருக்கின்றது. இதற்காக போட்டியாளர்களை தேர்வு செய்கின்ற பணி நடைபெற்று வருகின்றது. 


இத்தகைய சூழலில், பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை கிரண் கலந்து கொள்ள இருப்பதால தகவல் வெளியாகி இருக்கின்றது. அன்பே சிவம், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்களை கவர்ந்த நடிகை கிரண் தற்போது பிரத்யேலமாக செயலி ஒன்றை உருவாக்கி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். 

இத்தகைய நிலையில் நடிகை கிரண் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றார் என்றும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kiran Rathore In biggboss 6


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->