எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.. 'கேரளா ஸ்டோரி' படத்திற்கு குஷ்பு ஆதரவு‌.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் இந்து இளம் பெண்களை மூளை சலவை செய்து மதமாற்றி ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக எடுக்கப்பட்ட படம் தான் தி கேரளா ஸ்டோரி திரைப்படம். கேரளாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனையடுத்து தமிழகத்தில் கடந்த மே 5ம் தேதி பலத்த பாதுகாப்புகளுடன் வெளியாகியது. இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அசம்பாவிதங்களை தவிர்க்க திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாத என அறிவிக்கப்பட்டது. அதற்கு காரணம் சட்ட ஒழுங்கு பிரச்சினை மற்றும் படத்திற்கு வரவேற்பு இல்லாததால் திரையரங்கு நிர்வாகங்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகையும், பாஜக நிர்வாகிகளுமான குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துபவர்கள் எதைக்கொண்டு அச்சம் கொள்கிறார்கள் என தெரியவில்லை. வெளிப்படையாக கூறப்பட்ட உண்மை அல்லது இந்த உண்மையின் அங்கமாக பல ஆண்டுகளாக அமைதியாகவும் தெரியாமலும் இருந்ததா என்று புரியவில்லை. 

எதை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானம் செய்து கொள்ளட்டும். நீங்கள் யாருக்காகவும் முடிவெடுக்க வேண்டாம் காட்சிகளை ரத்து செய்வதற்காக தமிழக அரசு சாக்குப் போக்குகளை கூறி வருகிறது.

இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய திரைப்படம் என்பதை மக்களிடம் தெரிவிக்க செய்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kushboo support to Kerala story movie tweeted


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->