வெளியானது காத்துவாக்குல ரெண்டு காதல் ட்ரெயிலர்.! எகிறும் எதிர்பார்ப்பு.!
kvrk movie trailer video viral
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இதில், நடிகர் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த நவம்பர்-18 ஆம் தேதி நயன்தாராவின் 37 வது பிறந்தநாள் கொண்டாடபட்டதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியது.

அதில் சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து தனித்தனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
English Summary
kvrk movie trailer video viral