கேரளாவைவிட தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள்! நடிகை ரேகா நாயர்! - Seithipunal
Seithipunal


கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையால் கேரள சினிமாவில் பல்வேறு பரபரப்பான விஷயங்கள்  நடந்துள்ளன என தெரியவந்தது. இந்த அறிக்கையில், கேரள நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் கொடுமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரளா மட்டுமல்லாமல் மற்ற எல்லா திரையுலகிலும் இதனை போன்ற பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைகள் நடப்பதாக சில நடிகைகள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றன நிலையில், நடிகை ரேகா நாயர் தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது,

அனைத்து மொழி சினிமாவிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளன. தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகள் முதல் தான் படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் என்று தெரிந்த பெண் வரை அனைவரும் இதை அனுபவித்து கொண்டுதான் வருகிறார்கள். நான் குரல் கொடுத்தால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கப்படாது.

அதனால்தான், சில நடிகைகளும் நமக்கு எதற்கு இந்த வேலை என்று இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன. மலையாளத்திலாவது, 10 முதல் 20 பேர்தான் சிக்கியிருக்கிறார்கள், ஹேமா கமிட்டி அறிக்கைபோல தமிழ் சினிமாவில் வெளியானால் 500க்கும் மேற்பட்டோர் இங்கும் சிக்குவார்கள்.

இவ்வாறு நடிகை ரேகா நாயர் குற்றம்சாட்டி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakhs of sexual complaints in Tamil cinema than in Kerala Actress Rekha Nair


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->