முழு மூச்சுடன் களத்தில் இறங்கிய லட்சுமி மேனன்.. கை கொடுக்குமா முயற்சி.! - Seithipunal
Seithipunal


கும்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். அதன்பின் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார். 

பின்னர், புதிய நடிகைகளின் வரவால் லட்சுமிமேனனுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பாக மாறிப்போனது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புலிகுத்தி பாண்டியன் திரைப்படத்தில் லட்சுமிமேனன் நடித்தார். தெற்கத்திய கிராமப்புற கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதைகளில் லட்சுமிமேனனுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

அவருக்கு மற்ற நடிகைகளைப் போல நவீன வேடம் பொருந்தவில்லை என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. நடிகர் விமலுடன் சேர்ந்து அவர் நடித்த மஞ்சப்பை மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த மிருதன் உள்ளிட்ட படங்களில் அவரது கதாபாத்திரம் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை. படம் வெற்றி பெற்றபோதும் இது போன்ற கதாபாத்திரங்கள் லட்சுமி மேனனுக்கு செட் ஆகவில்லை என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது. 

தற்போது மீண்டும் அவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்கிறார். எப்படியாவது இந்த பட வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்து மீண்டும் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்று முழு மூச்சுடன் லட்சுமிமேனன் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என நாமும் வேண்டிக்கொள்வோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakshmi Menon in chnadramukhi 2


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->