திறமையான, அழகான நடிகை லட்சுமி மேனன் தமிழில் கம்பேக்! வெளியான அசத்தல் அப்டேட்! - Seithipunal
Seithipunal


13 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் ஆதி - இயக்குனர் அறிவழகன் கூட்டணியில் மீண்டும் புதிய திரைப்படம் உருவாக உள்ளது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் ‘ஈரம்’. இந்த படத்தில் நடிகர் ஆதி நடித்திருந்தார். படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கி இருந்தார்.

கடந்த 13 ஆண்டுகளுக்குப் பின் அறிவழகன் - ஆதி இணைந்து ‘சப்தம்’ என்கிற படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த புதிய படத்தின் பூஜை அண்மையில் தான் நடந்தது.

மீண்டும் ஒரு ஹாரர் - திரில்லர் பாணியில் இந்த படம் உருவாக்க உள்ளது. படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஆல்ஃபா ஃப்ரேம்ஸ், 7ஜி ஃபிமிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இந்த நிலையில், சப்தம் படத்தில் நடிகை லட்சுமி மேனன் இணைந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ரெக்க திரைப்படத்திற்குப் பின் புலிக்குத்தி பாண்டி, ஏஜிபி சீஷோபிரீனியா படங்களில் நடித்த நடிகை லட்சுமி மேனன் தற்போது ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திறமையான, அழகான லட்சுமி மேனனை 'சப்தம்' படத்தில் வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakshmi Menon New Movie 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->