"அபிராமிக்கு மெச்சூரிட்டியே இல்ல" கலாக்ஷேத்ரா விவகாரத்தில் அபிராமி கருத்துக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிலடி.!
Lakshmi Ramakrishnan condemns the Bigg Boss celebrity who gave an interview in support of the Kalashetra administration
சென்னையில் இயங்கி வந்த கலாக்ஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
சென்னையில் இயங்கி வந்த கலாக்ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் விளைவாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஹரி பத்மன் என்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல நடிகையும் பிக் பாஸ் பிரபலமான அபிராமி வெங்கடாசலம் என்பவர் கலாக்ஷேத்ரா நிர்வாகத்திற்கு ஆதரவாக தெரிவித்திருந்த கருத்து பல்வேறு மக்களிடமும் கண்டனங்களை பெற்றிருக்கிறது. இவரது கருத்தை பல்வேறு மக்களும் விமர்சித்து வருகின்றனர்.
பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் அபிராமி வெங்கடாசலம் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அவரது கருத்தை முதிர்ச்சித்தனம் இல்லாதது என கூறியுள்ள அவர் ஒரு விஷயத்தில் உணர்ச்சி வசப்பட்டு எதையும் பேசி விடக்கூடாது என தெரிவித்துள்ளார். மாணவிகளுக்கு தப்பு நடக்கும்போது ஆதாரத்தை எல்லாம் சேகரித்து வைத்துக் கொண்ட புகார் கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார். மாணவர்களும் பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளானார்கள் என்று கூறுவதில் இருந்து அங்கு நடக்கும் கொடுமை தெரிகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Lakshmi Ramakrishnan condemns the Bigg Boss celebrity who gave an interview in support of the Kalashetra administration