என்னது மீண்டும் ஒரு 'குட்டி ஸ்டோரியா'... வெளியானது 'லால் சலாம்' படத்தின் அப்டேட்! - Seithipunal
Seithipunal


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராத் நடிக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. 

அதாவது, இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மேலும் நடிகர்கள் ரஜினியின் குட்டி கதையை கேட்க தயாராகுங்கள் என தெரிவித்தவாறு அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lal Salaam Update released


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->