தி லெஜன்ட் சரவணா அண்ணாச்சியின் வாடிவாசல் பாடல் யூட்யூபில் சாதனை.!  - Seithipunal
Seithipunal


சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படத்தின் வாடிவாசல் பாடல் வெளியாகி 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்துள்ளது. 

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் என சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது புதிய திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தை நடிகர் அஜீத் குமாரை வைத்து உல்லாசம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அருள் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு தி லெஜன்ட் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வாடிவாசல் பாடல் வெளியாகி 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் சாதனை செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

legend saravana vadivasal song get 2m views


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->