லியோ ஆடியோ லான்ச் இல்லை! விஜய் ரசிகர்களை சோகத்தில் தள்ளிவிட்டு, அரசியல் அழுத்தம் இல்லை என சமாதானம்!  - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்காது என படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மிகவும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு ஆனது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.  

ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில், அதனை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் லியோ படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்த்து ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை இந்த அறிவிப்பானது ஏற்படுத்தியிருக்கிறது. 

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "நிரம்பி வழியும் பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, லியோ இசை வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.

ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்கள் வழங்கி உங்களை மகிழ்ச்சிப்படுத்துவோம்.

மேலும் பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல" எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo audio launch cancelled for some security issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->