"தளபதி" விஜய் அடைமொழி! நேற்று அரசாணை! இன்று அமைச்சர்! திருப்பதியில் லியோ படக்குழு! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 

இந்த திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் விஜய் பேசிய தகாத வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஏற்கனவே கஞ்சா, சிகரெட், மதுவை ஊக்கிவிப்பதாக விமர்சனகள் எழுந்த நிலையில், எதற்கு வம்பு என்று லியோ ட்ரெய்லரில் அந்த வார்த்தையை படக்குழு மியூட் செய்துவிட்டது.

'லியோ' படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியான நிலையில், நேற்று வெளியான 3 வது பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டு சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக, லியோ திரைப்படத்திற்கான சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

வடம் வெளியாகும் வரும் 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அரசாணையில் "தளபதி" விஜய் என்று அடைமொழியோடு பதிவு செய்யப்பட்டு இருப்பது ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுவாமிநாதன், லியோ பட விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை. லியோ திரைப்படத்திற்கு முட்டுக்கட்டை போடுவதால் தமிழக அரசுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மேலும், சிறப்பு காட்சி திரையிட தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்ததால் மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், 'லியோ' படம் வெற்றி பெற வேண்டி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பட குழு திருப்பதி மலையேறி இன்று காலை சாமி தரிசனம் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo movie TNG Order and minister Explain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->