'லியோ’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


'லியோ’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் - இதுதான் காரணமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இதில் த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், பிரியா ஆனந்த்,மிஷ்கின், கவுதம் வாசுதேவ்மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். செவன்ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்தப் படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘நான்ரெடி’ பாடலை விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22-ம் தேதி படக் குழு வெளியிட்டது. அனிருத் இசையில் விஜய், அனிருத், அசல்கோலார் உள்ளிட்டோர் இந்தப் பாடலை பாடியுள்ளனர். இந்தப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழு இதன் இசை வெளியீட்டு விழாவை, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த விழா ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில், லியோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுவாக விஜய் படத்தின் ட்ரெய்லர் வெளியானால், ரசிகர்களை மகிழ்விப்பதற்காக திரையரங்குகள் அதனை ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்வது வழக்கம்.

அந்த வகையில், சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் உள்ள கார் பார்க்கிங்கில் பிரம்மாண்ட ஸ்கிரீன் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தியேட்டர் நிர்வாகம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, அனுமதி தொடர்பாக காவல் ஆணையரை அணுகுமாறு போலீஸார் அறிவுறுத்தினர். இதற்கு முன்னதாக லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு கொண்டாட்டத்துக்கும் சிக்கல் ஏற்பட்டிருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

leo trailer released today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->