படப்பிடிப்பின் போது சோகம் - மின்சாரம் தாக்கி லைட்மேன் பலி - ஒருவர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் 'அறம்'. கோபி நயினார் இயக்கிய இந்த படம் தமிழ் திரையிலகில் வித்தியாசமான ஒரு படமாக ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு இயக்குனர் கோபி நயினார் நீண்ட நாட்களாக படம் இயக்காமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில், இவர் 'அகரம் காலனி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு  திருவள்ளூர்  மாவட்டம், செங்குன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதன் படி, நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பின்போது மின்சாரம் தாக்கி லைட்மேன் சண்முகம் மற்றும் ரஞ்சித் என்பவர் பாதிக்கப்பட்டனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர், சண்முகம் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகவும், ரஞ்சித் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

light man died in shooting spot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->