லவ்வர் பட நடிகை நிகிலாவின் புது அப்டேட்!
Lover film actress Nikila new update
இயக்குநர் திரவ் இயக்கும் புதிய படத்தில் லவ்வர் பட நடிகை நிகிலா நடித்துள்ளார். இவருடன் விஜய் டியூக், விபிதா நடித்துள்ளனர்.
டோபமைன் @ 2.22 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள்- சீசன் 3ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் டியூக், இயக்குநர் திரவ்வின் புதிய படத்தில் நடித்துள்ளார்.
மேலும், குற்றம் கடிதல் படத்தின் புகழ் சத்யா நடித்துள்ள நிலையில், விபிதா, சதீஷ், சாம்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆலன் ஷோஜி இசையமைத்துள்ள நிலையில், பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் பாடல் வரிகளை திரவ் கையாண்டுள்ளார்.
இந்த படம் தொடர்பாக இயக்குனர் திரவ் ’கூறுகையில், டோபமைன் @ 2.22 படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது என்றும், அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், 18 முதல் 20 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் படமாக்கி முடித்துள்ளதாகவும், குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களின் புகழ் நிகிலா ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறினார்.
English Summary
Lover film actress Nikila new update