மணிகண்டனின் "லவ்வர்" திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'குட் நைட்'. இந்த திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன், மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தைப் பெற்றார். 

அதன் பிறகு பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ''லவ்வர்'' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரிப்ரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு சிரியா கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் லவ்வர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது லவ்வர் திரைப்படம் வருகின்ற மார்ச் 27ஆம் தேதி டிஸ்னீப் பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lover movie OTT release update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->