#AK62 : அஜித்தால் அதிருப்தியில் லைகா நிறுவனம்.. முக்கிய நடிகருக்கு குறிவைத்து நகர்வு.!  - Seithipunal
Seithipunal


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த ஏ கே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு இயக்குனர் மகில் திருமேனி சேர்க்கப்பட்டார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்னும் லைக்கா அறிவிக்கவில்லை. இதற்கு காரணம் நடிகர் அஜித்குமார் இப்படத்திற்கு எக்கச்சக்க கண்டிஷன்கள் போடுகிறாராம். 

எனவே அவரை திருப்திப்படுத்தும் விதமாக படத்தை கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை லைக்கா தரப்பில் ஏற்படவில்லையாம். தற்போது லைக்கா நிறுவனம் நிறைய தமிழ் திரைப்படங்களை வாங்கி குவித்து வருகின்றது. அத்துடன் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கல்லா கட்டியதை தொடர்ந்து பெரிய பெரிய நடிகர்களின் கால் சீட்டுகளை வளைத்து போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தான் அஜித் குமாரையும் கமிட் செய்தார்கள். ஆனால் அஜித் குமார் படத்தில் அதிகப்படியான கண்டிஷன்கள் போடுவதால் படம் குறித்த அறிவிப்புகளும் படத்தின் வேலைகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைய உள்ளது. ஆகவே, ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள திரைப்படத்தை முதலில் இயக்கிவிட்டு அஜித்தின் படத்தை பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என்று லைக்கா நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. லியோ படத்திற்கு போட்டியாக ஏகே 62 படம் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது இப்படத்தின் பணிகளில் தாமதம் ஏற்படுவது ரசிகர்களுக்கு கவலையை கொடுத்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lyca plan To made Rajini Movie first


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->