கார்த்தியின் சர்தார் படத்தில் இணைந்த லைலா.! சூசகமாக வெளியிட்டுள்ள பதிவு.! - Seithipunal
Seithipunal


கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கிவருகின்ற இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றார். இன்ர திரைப்பட வெளியீட்டிற்குப் பின் ஓடிடி உரிமை விற்கப்பட்டு இருக்கின்றது.

டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகளுடன் தற்போது ஓடிடி உரிமையும் இணைந்துள்ளது. கார்த்தியின் சர்தார் திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம்  கைப்பற்றி இருக்கின்றது. 

இது, தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றது. தெலுங்கு படங்கள் மற்றும் தெலுங்கு தொடர்களை வெளியிட்டு வந்தனர். சமீபத்தில்தான் இந்த ஓடிடி தமிழுக்காகவும் விரிவாக்கம் செய்யப்பட்டது.இத்தகைய நிலையில், சர்தார் படத்தின் ஓடிடி உரிமை இந்த நிறுவனம், மிகப் பெரும் தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சர்தார் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்தியின் பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய படங்களின் ரிலிஸுக்கு பின் சர்தார் வெளியாகின்றது.

இந்நிலையில் பழைய நடிகை லைலா இந்த படத்தில் நடித்திருப்பதாக சமூகவலைத்தள பக்கத்தில் சூசகமாக ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். 16 வருடங்களுக்கு பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடித்து இருப்பது பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lyla in sardhar movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->