#Breaking:ஜிவி.பிரகாஷின் ஜெயில் பட பிரச்சனை..! உயர்நீதிமன்றம் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


அங்காடி தெரு, அரவான், வெயில் போன்ற திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். இதில் அபர்ணதி ஹீரோயினாக நடித்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தில், ராதிகா, நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. 

மேலும், "தங்களிடம் ஒப்பந்தம் செய்துவிட்டு மற்றொரு நிறுவனத்திடம் பட வெளியீட்டு உரிமையை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது." என்று குற்றம்சாட்டி உள்ளது. 

எனவே படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், இது குறித்த விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras high court judgement about Gv prakash jayil movie


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->