சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற 'மகாராஜா' இயக்குனரின் நெகிழ்ச்சி பேச்சு..!! - Seithipunal
Seithipunal



'மகாராஜா' திரைப்பட இயக்குனரான நித்திலன் சுவாமிநாதனை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 

கடந்த 2017ம் ஆண்டு "குரங்கு பொம்மை" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். இவரது முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இவரது இரண்டாவது படமாக "மகாராஜா" திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. 

முதல் படத்தைப் போலவே இரண்டாவது படத்தையும் வெற்றி படமாகக் கொடுத்துள்ள நித்திலன், இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, நடராஜன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து இந்த வெற்றி படத்தை இயக்கியுள்ளார். இதுவரை காமெடியனாக மட்டுமே அறியப்பட்ட சிங்கம் புலி, மகாராஜா படத்தில் மிகவும் வெறுக்கும்படியான ஒரு கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மகாராஜா திரைப்படம் தனது 50வது நாளை எட்டியுள்ளது. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நித்திலன் சுவாமிநாதனை தனது இல்லத்திற்கு அழைத்து அவரைப் பாராட்டி வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து நித்திலன் சுவாமிநாதன் தெரிவிக்கையில், "நான் சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்தது ஒரு வாழ்க்கைப் புத்தகத்தைப் படித்ததை போன்ற அனுபவத்தை தந்திருக்கிறது. 

கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டாரிடம் இருந்து பெற்ற அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். "மகாராஜா" திரைப்படம் அவருக்கு மிகவும் பிடித்தது என்று அவர் என்னிடம் சொன்ன போது, எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கிறேன்" என்று மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharaja Movie Director Nithilan Swaminathan Meets Super Star Rajinikanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->