ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு.!! விஜயகாந்த் மறைவுக்கு மோகன் லால் இரங்கல்!! - Seithipunal
Seithipunal


திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிர்பங்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் "சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும்
சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது இதயம் செல்கிறது. ஓம் சாந்தி.!" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

malaiyala super star Mohanlal condoles Vijayakanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->