காதலுக்கு தகுதி தேவையில்ல.. மாஸ்டர் பட நடிகையின் உறுதியான பேச்சு.!
Malavika In Christy Pressmeet
மலையாள நடிகை மாளவிகா மோகனன் முதன் முதலில் தமிழ் திரைப்படமான மாஸ்டர் படத்தில் அறிமுகமானார். முதல் படமே கோலிவுட் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜயுடன் அவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கும் மலையாள திரைப்படம் கிறிஸ்டி வரும் பிப்ரவரி 17 ல் வெளியாக இருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் வயதான பெண்ணை ஒரு இளைஞர் காதலிப்பதை போல காட்டப்பட்டிருக்கும். இது பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாளவிகாவிடம் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மாளவிகா, "காதல் காதல் தான். அதற்கு வயது, தகுதி எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன்." என பதில் அளித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் ஒரு டியூஷன் ஆசிரியராக நடித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
English Summary
Malavika In Christy Pressmeet