காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர்! தீவிர விசாரணையில் போலீசார்!
Ramandhapuran young man mystery death
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே காரில் இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்திரக்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
சத்திரக்குடி போலீசார் காரை திறந்து சோதனையிட்டபோது, குளிரூட்டும் இயந்திரம் இயங்கிய நிலையில், காருக்குள் ராமேசுவரம் காந்தி நகரம் வடக்கு தெருவை சேர்ந்த அபிஷேக் (40) மர்மமான முறையில் இறந்திருந்தார். அவரின் அருகில் மதுப் புட்டியும் இருந்தது.
உடனே, அவரது உடல் மீட்கப்பட்டு கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, சத்திரக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, மரணத்தின் காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Ramandhapuran young man mystery death