புதுக்கோட்டை: காணாமல் போன கல்லூரி மாணவி சடலமாக மீட்பு! அடுத்தடுத்த இரு சம்பவங்கள்!
Pudukottai College girl Mystery Death
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காணாமல் போன கல்லூரி மாணவி நேற்று கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருக்காகுறிச்சி வடக்கு ராஜா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரமேஷின் மகள் கௌசல்யா (வயது 20), புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார்.
கடந்த 25 ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் திரும்பவில்லை என்றும், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் வடகாடு போலீஸில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று அருகிலுள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. தீயணைப்பு துறையினர் உடலை மீட்டபோது அது கௌசல்யா என்பதும் உறுதியானது. சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, அதே மாவட்டத்தில், கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது 21), கடந்த 26 ஆம் தேதி இரவு நண்பர்களுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
நேற்று குளமங்கலம் வடக்கு கிராமத்தில் புதர் இடையிலுள்ள 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் கிடந்த அவரின் சடலத்தை மீட்ட போலீஸார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Pudukottai College girl Mystery Death