மாசற்ற மனதுக்கும், தூய அன்பிற்கும் சொந்தக்காரர் - விஜயகாந்திற்கு புகழஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin ADMK EPS DMDK Vijayakanth
விஜயகாந்த் நினைவு நாளையொட்டி அவரை நினைவுகூர்ந்து பல்வேறு தலைவர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும், தேமுதிகவின் அழைப்பை ஏற்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர், பத்ம பூஷன் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
CM MK Stalin ADMK EPS DMDK Vijayakanth