பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் திடீர் மரணம்.! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கேரளா : மலையாள திரையுலகின் பிரபல இளம் நடிகர் சரத் சந்திரன் திடீரென மரணமடைந்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாள திரையுலகில் பின்னணி குரல் கொடுப்பவராக அடியெடுத்து வைத்த நடிகர் சரத் சந்திரன், அனீஸ்யா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். 

தொடர்ந்து 'அங்மாலி டைரிஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான சரத் சந்திரன், கூடே, ஒரு மெக்ஸிகன் அபரதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சரத் சந்திரன் கொச்சியில் உள்ள தனது வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

இவரின் மரணத்துக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. நடிகர் சரத் சந்திரனின் மர்ம மரணம் அவரின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malayalam film industrys young actor Sarath Chandran passed away


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->